/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புது மாரியம்மன் கோவில்திருவிழா 22ல் ஆரம்பம்
/
புது மாரியம்மன் கோவில்திருவிழா 22ல் ஆரம்பம்
ADDED : ஏப் 17, 2025 02:09 AM
ப.வேலுார்:-ப.வேலுார், சுல்தான்பேட்டையில் பிரசித்தி பெற்ற புது மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடப்பது வழக்கம்.
நடப்பாண்டு, வரும், 22ல் காப்பு கட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்குகிறது. 25ல் பூச்சொரிதல் விழா, 28ல் வடிசோறு அக்னிசட்டி எடுக்கும் நிகழ்ச்சி, 29ல் பூ மிதித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 30ல் பொங்கல் மாவிளக்கு, கிடாவெட்டு, அலகு குத்துதல், மே, 1ல் கம்பம் காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சி, 2ல் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.