sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ராசிபுரத்தில் ரூ.5 கோடியில் புதிய தாசில்தார் அலுவலகம்

/

ராசிபுரத்தில் ரூ.5 கோடியில் புதிய தாசில்தார் அலுவலகம்

ராசிபுரத்தில் ரூ.5 கோடியில் புதிய தாசில்தார் அலுவலகம்

ராசிபுரத்தில் ரூ.5 கோடியில் புதிய தாசில்தார் அலுவலகம்


ADDED : ஜூலை 06, 2025 12:51 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், ராசிபுரம் தாசில்தார் அலுவலகம் கடந்த, 1981ல் அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர் சோமசுந்தரத்தால் அடிக்கல் நாட்டப்பட்டது. 45 ஆண்டுகளான நிலையில், தாசில்தார் அலுவலகம் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. அதேபோல், பொதுமக்கள் அதிகளவு வருவதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

எனவே, தாசில்தார் அலுவலக வளாகத்தில் புதிய அலுவலகம் கட்டுவதற்கான திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டது. தரை தளம், முதல் தளம் என மொத்தம், 12,658 சதுரடியில் கட்டப்படவுள்ளது. இதில் தரைதளத்தில் தாசில்தார் அறை, கணினி அறை, அலுவலக அறை, இருப்பறை, மாற்றுத்திறனாளிகள் கழிவறை, பணியாளர்கள் மற்றும் பொது கழிவறை, முதல் தளத்தில் பதிவறை, சத்திப்பு அறை, அலுவலக அறை, பணியாளர்கள் மற்றும் பொது கழிவறை ஆகியவை அமைக்கப்படுகிறது.

இதற்கான அடிக்கல்நாட்டு விழா, நேற்று நடந்தது. அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் துர்கா மூர்த்தி, எம்.பி., ராஜேஸ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us