sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

/

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்


ADDED : ஜன 07, 2024 11:31 AM

Google News

ADDED : ஜன 07, 2024 11:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போதைப்பொருள் விற்ற கடைக்கு 'சீல்' வைப்பு

சேந்தமங்கலம் டவுன் பஞ்., பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, செயல் அலுவலர் இளவரசனுக்கு புகார் வந்தது. அதை தொடர்ந்து, எஸ்.எஸ்.ஐ., சுப்பிரமணி, டவுன் பஞ்., துப்புரவு ஆய்வாளர் மலையப்பன், துப்புரவு மேற்பார்வையாளர் அழகுராஜா, துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர், சேந்தமங்கலம் டவுன் பஞ்., பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அதில், ஆண்டிதெரு பகுதியில் முருகேசன் என்பவரது மளிகை கடையில் சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட புகையிலை, போதை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடைக்கு, 'சீல்' வைத்தனர்.

பரமத்தியில் ரூ.92.21 லட்சத்தில் கட்டப்பட்ட பல்வேறு

கட்டடங்களை அமைச்சர் திறப்பு

பரமத்தி மற்றும் கபிலர்மலை யூனிய னுக்குட்பட்ட பகுதிகளில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், 92.21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய வகுப்பறை கட்ட டம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், பொது வினியோக கடை மற்றும் புதிய அங்கன்வாடி மையம் உள்ளிட்ட புதிய கட்டடங்களை, நேற்று திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்தார். நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் முன்னிலை வகித்தார்.

அதை தொடர்ந்து, அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:

முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின், கல்வி மற்றும் மருத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி, பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், இல்லம் தேடி கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் திட்டம், கல்லுாரி கனவு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். பெண் கல்வியை ஊக்குவிக்க, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவியர்களுக்கு உயர்கல்வி பயில புதுமை பெண் திட்டம் மூலம் மாதம், 1,000- ரூபாய் வழங்கி வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

மண் திட்டில் டூவீலர் மோதி

தடுமாறி விழுந்தவர் பலி

குமாரபாளையம், ராஜம் தியேட்டர் அருகே குள்ளப்பா நகரில் வசிப்பவர் சுரேஷ்குமார், 34. தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதி. இவர் வேலை முடிந்து, நேற்று அதிகாலை, 2:15 மணியளவில், தனது, 'ஹீரோ பேஷன் புரோ' டூவீலரில், ஈரோட்டிலிருந்து குமாரபாளையம் கோட்டைமேடு சர்வீஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஒரு வளைவில் திரும்பும் போது, அங்கிருந்த மண் திட்டில் மோதியதில் நிலை தடுமாறி, அங்கிருந்த பள்ளத்தில் விழுந்துள்ளார். இதில், சுரேஷ்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், சுரேஷ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ப.வேலுார் டவுன் பஞ்.,ல்

வரும் 11ல் மன்ற கூட்டம்

ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. தி.மு.க.,வை சேர்ந்த கவுன்சிலர் லட்சுமி தலைவராக உள்ளார். மன்ற கூட்டத்தில், தி.மு.க.,வை சேர்ந்த சில கவுன்சிலர்கள் தீர்மானங்கள் நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து முடங்கியது.

தற்போது, பா.ம.க., - தி.மு.க., கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்ததால் தலைவர் லட்சுமிக்கு மெஜாரிட்டி ஏற்பட்டுள்ளது. தற்போது, 10 கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், வரும், 11ல் நடக்கும் மன்ற கூட்டத்தில் தலைவர் லட்சுமி கொண்டு வரும் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. இதனால், தற்போது ஜன., மாதத்துக்கான மன்ற கூட்டம் நடத்தவும், முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற ஏதுவாக மன்ற கூட்டம் நடத்துவது என, டவுன் பஞ்., தலைவர் லட்சுமி, செயல் அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் கவுன்சிலர்கள் முடிவு செய்தனர். அதன்படி வரும், 11ல் மன்ற கூட்டம் நடத்துவது என முடிவு செய்து தலைவர் லட்சுமி சார்பில் கவுன்சிலர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிப்பாளையம் அருகேபூ வியாபாரி அடித்து கொலை

பள்ளிப்பாளையம் அருகே, தலையில் கல்லை போட்டு பூ வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிப்பாளையம் அருகே, தாஜ்நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 56; பூ வியாபாரி. இவரது மனைவி சாந்தி, சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஆறுமுகம் தனது மகன் வடிவேலுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை, கீழ்காலனி பகுதியில் தலையில் கல்லை போட்டு ஆறுமுகம் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த பள்ளிப்பாளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டனர். முன்விரோதம் காரணமாக யாரேனும் அடித்து கொலை செய்தனரா? என, பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாம்பு கடித்து பெண் பலிகுமாரபாளையம் அருகே, பூலக்காடு பகுதியை சேர்ந்தவர் காந்திமதி, 45. இவர், அதே பகுதியில் தட்டுவடை செய்யும் நிறுவனத்தில் கூலிவேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, 6:15 மணியளவில் அருகே உள்ள வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த பாம்பு, இவரது காலில் கடித்துள்ளது. இதுகுறித்து, தான் வேலை செய்யும் நிறுவனத்தில் தெரிவித்துள்ளார். அவர்கள், காந்திமதியை மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு, நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு காந்திமதி உயிரிழந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்களின் கோரிக்கையை ஏற்று கல்குவாரி பகுதியில் அளவீடு

எலச்சிபாளையம் யூனியன், கோக்கலை கிராமத்தில், ஐந்து கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைதல், சுற்றுச்சூழல் பாதிப்பு, காற்று மாசுபாடு, குடியிருப்புகளில் சேதாரம், கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு பல்வேறு தொற்றுநோய் பரவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை இப்பகுதி மக்கள் சந்தித்து வந்தனர்.

எனவே, சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் கல்குவாரிகளை நிரந்தரமாக தடைசெய்ய வேண்டும் என, பல்வேறுகட்ட போராட்டங்களை இப்பகுதி விவசாயிகள் மற்றும் மக்கள் நடத்தி வந்தனர். பலமுறை அதிகாரிகளிடத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தனர். மேலும், கல்குவாரிகளுக்கும், குடியிருப்புகளுக்கும் இடையிலான துார இடைவெளி குறித்தான அளவீடு செய்ய வேண்டும் என, மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனடிப்படையில், நேற்று, கோக்கலை கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரிகள் அருகே, அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்தனர். எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில், 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ராமர் கோவில் கும்பாபிஷேகம்

நாமக்கல் எம்.பி.,க்கு அழைப்பு

நாமக்கல் எம்.பி., சின்ராஜூக்கு, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழை, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் வழங்கினர்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜன., 22ல் நடக்கிறது. இதற்கான அழைப்பிதழை, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட ஆன்மிக அமைப்புகள், வீடுதோறும் சென்று மக்களிடம் வழங்கி வருகின்றன. இதற்காக, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் அழைப்பிதழ், ராமர் கோவில் படம், அயோத்தியில் வைத்து பூஜிக்கப்பட்ட அட்சதை ஆகியவை வழங்கப்படுகிறது. இதற்காக மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி என தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு அழைப்பிதழ் உள்ளிட்ட பொருட்கள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன. நேற்று, நாமக்கல் எம்.பி., சின்ராஜூக்கு, அவரது இல்லத்தில் ராமர் கோவில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்., மக்கள் தொடர்பு நிர்வாகி செந்தில் மற்றும் மண்டல செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் எம்.பி.,யிடம் அழைப்பிதழை வழங்கினர். மேலும், கும்பாபிஷேகத்தின் போது, வீட்டில் விளக்கேற்ற பிரதமர் மோடி அறிவுறுத்தியதை நினைவுப்படுத்தினர்.

வேட்டி தினம் கொண்டாட்டம்

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும், 'இல்லம் தேடி கல்வி' மையத்தில், வேட்டி தினம் கொண்டாடப்பட்டது. இதில், மாணவர்கள் வேட்டி, சட்டை அணிந்து வந்து, பாரம்பரியத்தின் பெருமைகளை உணர்த்தினர். மேலும், நெசவாளர்களின் பணி மற்றும் திறமைகளை மாணவர்கள் பேசினர்.

'இல்லம் தேடி கல்வி' நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடியல் பிரகாஷ் பங்கேற்று, நெசவாளர்கள் மற்றும் வேட்டியின் சிறப்புகள் பற்றி பேசினார். தன்னார்வலர் ராஜாத்தி, தீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மரத்தின் வேரில் பூத்த

அதிசய வாழைப்பூ

மோகனுார் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன், 56; விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில், வாழை சாகுபடி செய்துள்ளார். அதில், தார் ஈன்ற வாழை மரத்தை வெட்டியுள்ளார். வெட்டப்பட்ட வாழை மரத்தின் வேர்ப்பகுதியில், வாழைப்பூ பூத்துள்ளது. இந்த அதிசய வாழைப்பூவை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இதுகுறித்து, விவசாயி வரதராஜன் கூறியதாவது:

காற்று வேகமாக அடிக்கும்போது, வாழைமரம் அசைந்ததால், நடுப்பகுதியில் வாழைப்பூ வைத்து தார் போடும். ஆனால், வேர்ப்பகுதியில் முதன் முறையாக பூ வைத்து உள்ளது. இதுபோல் வளர்ந்த மரத்தின் வேர் பகுதியில் வாழை பூ வைத்துள்ளதை பார்த்தது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு

ராசிபுரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட ஆண்டகளூர்கேட் பகுதியில், 2023 நவ., 14ல், ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க வந்த சரஸ்வதி என்பவரிடம், ஏ.டி.எம்., கார்டு மற்றும் பின் நம்பரை பெற்றுக்கொண்டு, அவரிடம் வேறு ஏ.டி.எம்., கார்டை கொடுத்து ஏமாற்றிய வாலிபர், மற்றொரு மையத்தில், 23,000 ரூபாய் பணத்தை எடுத்துச்சென்றார்.

இந்த வழக்கில், திருச்செங்கோடு எட்டிமடைபுதுாரை சேர்ந்த வாலிபர் இளங்கோவன், 28, என்பவரை, ராசிபுரம் போலீஸ் எஸ்.ஐ., ஆனந்தராஜ், போலீஸ் பசுபதி ஆகியோர் கைது செய்தனர். அதேபோல், இரவு ரோந்து பணியின் போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 150 கிலோ குட்காவை, மொளசி போலீஸ் எஸ்.ஐ., வெற்றிவேல் பறிமுதல் செய்தார். குற்றத்தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட மூவரையும் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

ஆனங்கூர் பஞ்.,ல் திட்டப்பணிகள்

துவக்கி வைப்பு

ஆனங்கூர் பஞ்., பகுதியில் திட்டப்பணிகளை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த ஆனங்கூர் பஞ்.,க்குட்பட்ட பழையபாளையம் பகுதியில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் நிதியிலிருந்து, 5 லட்சத்து, 15,000 ரூபாய் மதிப்பீட்டில், வீடுதோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. அதை மக்கள் பயன்பாட்டுக்கு, நேற்று, முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி திறந்து வைத்தார்.

தொடர்ந்து, ஆண்டிக்காடு பகுதியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் நிதியிலிருந்து, 5 லட்சத்து, 15,000 ரூபாய் மதிப்பீட்டில் சாக்கடை கால்வாய் அமைக்க, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

அ.ம.மு.க., நிர்வாகி அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

பள்ளிப்பாளையம் அடுத்த ஆவாரங்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, 50. இவர் சில ஆண்டுக்கு முன், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, அ.ம.மு.க.,வில் இணைந்தார். தற்போது, அ.ம.மு.க., மீனவர் அணி நாமக்கல் மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். இவர், நேற்று காலை, பள்ளிப்பாளையம் நகர அ.தி.மு.க., செயலாளர் வெள்ளிங்கிரி முன்னிலையில், முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணியை சந்தித்து மீண்டும், அ.தி.மு.க.,வில் சேர்ந்துகொண்டார்.






      Dinamalar
      Follow us