/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் ரூ.1 கோடியில் 'இரவு வான் பூங்கா' ஒரு வாரத்தில் பணி முழுமைபெறும் என எதிர்பார்ப்பு
/
கொல்லிமலையில் ரூ.1 கோடியில் 'இரவு வான் பூங்கா' ஒரு வாரத்தில் பணி முழுமைபெறும் என எதிர்பார்ப்பு
கொல்லிமலையில் ரூ.1 கோடியில் 'இரவு வான் பூங்கா' ஒரு வாரத்தில் பணி முழுமைபெறும் என எதிர்பார்ப்பு
கொல்லிமலையில் ரூ.1 கோடியில் 'இரவு வான் பூங்கா' ஒரு வாரத்தில் பணி முழுமைபெறும் என எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 24, 2025 01:39 AM
நாமக்கல், கொல்லிமலை, அரியூர் சோலை காப்புக்காடு பகுதியில், ஒரு கோடி ரூபாயில், 'இரவு வான் பூங்கா' அமைய உள்ளது. முதற்கட்டமாக, 'டெலஸ்கோப்' அரங்கம் அமைக்கும் பணி முடிந்துள்ளது. ஒருவாரத்தில் பணி முழுமைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சுற்றுலா தலமாக விளங்குகிறது. கடல் மட்டத்தில் இருந்து, 1,300 மீ., உயரம் கொண்ட இம்மலையின் உச்சிக்கு செல்ல, 70 கொண்டை ஊசி வளைவுகளை கடக்க வேண்டும். இங்கு ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, சிற்றருவி, மாசிலா அருவி, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், அரப்பளீஸ்வரர் கோவில், வியூ பாயின்ட் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் இடங்களாக அமைந்துள்ளன.
இந்நிலையில், தமிழக அரசு, கொல்லிமலையில், ஒரு கோடி ரூபாயில், 'இரவு வான் பூங்கா' அமைக்கப்படும் என அறிவித்து, முதற்கட்டமாக, 44 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கொல்லிமலையில், 'இரவு வான் பூங்கா' அமைக்க, சென்னை குழுவினர் ஆய்வு செய்து, அரியூர் சோலை காப்புக்காடு பகுதியை தேர்வு செய்தனர். இந்த பூங்காவில், மிகவும் துல்லியமாக பார்க்கக்கூடிய, 'டெலஸ்கோப்' அரங்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நட்சத்திரங்களை மிக அருகில் இருப்பதுபோல் பார்க்க முடியும். இரவுநேர விலங்குகளுக்கு இணக்கமான ஒரு பூங்காவாக இருக்கும். மின்விளக்குகளின் பயன்பாட்டை குறைத்து, இரவு வானத்தில் நட்சத்திரங்களை பார்ப்பதை இது அதிகரிக்கும்.
மேலும், கொல்லிமலையில், 'இரவு வான் பூங்கா' நிறுவுவதன் மூலம், ஒளி மாசுபாடு குறைவதோடு, தாவரங்கள், விலங்கினங்களின் பாதுகாப்பையும் ஒட்டுமொத்த பல்லுயிரிகளையும் உறுதி செய்ய முடியும்.
உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்கள், வானியல் புகைப்பட கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், இயற்கை ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில் இப்பூங்கா அமைய உள்ளது. தற்போது, 90 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில், ஒரு வாரத்தில் பணிகள்
முழுமைபெறும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.