/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா பால்குடம், முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்

ADDED : நவ 02, 2024 01:01 AM
ராசிபுரம், நவ. 2-
ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. பொதுவாக மற்ற மாரியம்மன் கோவில்களில், திருவிழாவை முன்னிட்டு பூச்சாட்டுதல் நடக்கும். அதன்பின் கம்பம் நடும் நிகழ்ச்சி நடக்கும்.
சத்தாபரணம் நிகழ்ச்சியுடன் விழா முடிந்ததும், கம்பத்தை அகற்றி நீர் நிலைகளில் விட்டுவிடுவர். ஆனால், ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில், ஆண்டு முழுவதும் கோவில் முன் கம்பம் இருக்கும் இதனால் தான் நித்திய சுமங்கலி மாரியம்மன் என, பெயர் வந்தது.
கடந்த மாதம், 22ல் பூச்சாட்டுதலுடன் தேர் திருவிழா தொடங்கியது. திருவிழா தொடங்கப்பட்ட முதல் நாளில் இருந்தே பக்தர்கள் தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை செய்து வருகின்றனர். இரவில் மண்டகப்படி நிகழ்ச்சியையொட்டி, சுவாமி பல்வேறு அலங்காரத்தில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நேற்று முன்தினம், 9வது நாள் கட்டளையில், 200-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். கடைவீதி பகுதியில் இருந்து தொடங்கி பழைய பஸ் ஸ்டாண்ட், சேலம் சாலை, நாமக்கல் சாலை வழியாக சென்று நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.