/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி
/
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி
ADDED : அக் 10, 2025 01:57 AM
வெண்ணந்துார், நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், வெண்ணந்துார் வட்டார வள மையத்திற்குட்பட்ட அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த, 1 முதல், 5ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, இரண்டாம் பருவத்திற்கான, 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி நடந்தது.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம், பயிற்சி ஆசிரியர்களிடம் பேசினார். வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுந்தரராஜன் ஆகியோர், பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினர்.
இப்பயிற்சியில், பாடநுால், ஆசிரியர் கையேடு மற்றும் பயிற்சி நுால்களை, 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி வகுப்பறையில் இன்றியமையாத கற்றல் விளைவுகளை பயன்படுத்துவது பற்றிய தகவல்கள் செயல்பாட்டின் மூலம் வழங்கப்பட்டது.
மாநில அடைவுத்தேர்வு-2025ன் தரவுகள் மற்றும் முதல் பருவத்தில் பாடங்களுக்கான கற்றல் விளைவுகள், மாதாந்திர தேர்வு, தொகுத்தறி மதிப்பீடு பற்றி எடுத்துரைக்கப்பட்டது. ஆசிரியர் பயிற்றுநர்கள் சுந்தரராஜன், சுரேந்திரன், கவிதா, ஜெகதீஸ் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டு பயிற்சி வழங்கினர். 106 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.