/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மின்னல் தாக்கி கருகிய தென்னை மரம்
/
மின்னல் தாக்கி கருகிய தென்னை மரம்
ADDED : அக் 10, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், குமாரபாளையம் பகுதியில், நேற்று மாலை, 6:00 மணி முதல் இடி, மின்னல் ஏற்பட்டு வந்தது. 6:45 மணிக்கு, கோட்டைமேடு, ஆளவந்தான்காடு பகுதியில் உள்ள தென்னை மரத்தின் மேல் இடி தாக்கி, தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது.
அருகே குடியிருப்பு பகுதிகள் இருந்ததால், வீட்டில் இரும்பு கட்டில் மீது சாய்ந்து உட்கார்ந்த மீனா, 37, அதிர்ச்சிக்குள்ளாகி மயங்கினார். அவரை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும், தென்னை மரம் கருகிய இடத்திற்கு அருகே உள்ள விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வரும் சுமதி, 45, என்பவரும் படுகாயமடைந்தார். அவரும், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.