/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு
/
சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு
ADDED : மே 15, 2025 01:44 AM
நாமக்கல் நாமக்கல்லில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின், 16வது மாவட்ட மாநாடு, நேற்று நடந்தது. தலைவர் கோமதி தலைமை வகித்தார். இணை செயலாளர் சுமதி, மாநில துணை தலைவர்கள் மஞ்சுளா, பெரியசாமி, மாவட்ட செயலாளர் தங்கராஜூ, பொருளாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வரும், 24, 25ல் திண்டுக்கல்லில் நடக்கும் மாநில மாநாட்டில், லட்சம் உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும்.
சத்துணவு ஊழியர்களை, அரசு பணியாளராக மாற்றி கால முறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும். கல்வி தகுதிக்கேற்ப காலியாக உள்ள அரசு பணியிடங்களில் பாலின பாகுபாடு இன்றி, பதவி உயர்வு வழங்க வேண்டும். ஒட்டுமொத்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். காலி பணியிடம் நிரப்பும் முன், பணி மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட தலைவர் தனசேகரன், செயலாளர் முருகேசன், முதல் நிலை கால்நடை ஆய்வாளர் சங்க மாநில துணை தலைவர் இளங்கோவன், மாவட்ட இணை செயலாளர் பெருமாள் உள்பட பலர் பங்கேற்றனர்.