/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைப்பிடிப்பு
/
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைப்பிடிப்பு
ADDED : ஜூன் 27, 2024 03:33 AM
எலச்சிபாளையம்: சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, எலச்சிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் குமரமங்கலம் விவேகானந்தா தனியார் கல்லுாரி மாணவியர் சார்பில், போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாணவியர் பதாகைகளை கையில் ஏந்தியபடி, போதைப் பொருளுக்கு எதிரான கோசங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுபோல், ப.வேலுார் போலீசார் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில் நடந்தது. இதில், கல்லுாரி மாணவர்கள், போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தியவாறு சென்றனர்.
குமாரபாளையத்தில், போலீசார் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற பேரணி நடந்தது.
எருமப்பட்டியில், அரசு பள்ளியை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டு போதை பொருட்களுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறும், போதை பொருட்களுக்கு எதிராக கோஷம் எழுப்பி உர்வலமாக செனறனர்.