/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஒடிசா - வெப்படைக்கு கஞ்சா கடத்தியவர் கைது
/
ஒடிசா - வெப்படைக்கு கஞ்சா கடத்தியவர் கைது
ADDED : அக் 11, 2025 01:19 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை சுற்று வட்டாரத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. விசாரணையில், ஜண்டுமாலிக் என்பவர், ஒடிசாவில் இருந்து கஞ்சா கொண்டு வந்து வெப்படை பகுதியில் நுாற்பாலை தொழிலாளர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.
இந்நிலையில், நேற்று காலை ஒடிசாவில் இருந்து கஞ்சா வாங்கி கொண்டு வெப்படை பகுதிக்கு வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனால், போலீசார் வெப்படை பஸ் ஸ்டாப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பஸ்சில் இருந்து கஞ்சாவுடன் வெப்படை பஸ் ஸ்டாப்பில் இறங்கிய ஜண்டுமாலிக், 23, என்பவரை போலீசார் கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கடந்த, ஆறு மாதமாக ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து வெப்படை சுற்று வட்டாரத்தில் விற்பனை செய்தது தெரியவந்தது.