/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கஞ்சா விற்பனை ஒடிசா வாலிபர் கைது
/
கஞ்சா விற்பனை ஒடிசா வாலிபர் கைது
ADDED : மே 30, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம் வெப்படை பகுதியில், கஞ்சா விற்பனை செய்த ஒடிசா வாலிபரை போலீசார் கைது செய்து, 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.ஒடிசாவை சேர்ந்த ஜெயராம் நாயக், 26. இவர், வெப்படை அடுத்த அம்மன் கோவில் பகுதியில் செயல்பட்டு வரும், தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார்.
நத்தமேடு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடியிருந்து வருகிறார். இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக, வெப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது. நேற்று மாலை போலீசார், இவர் குடியிருந்த வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது, விற்பனைக்கு வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, ஜெயராம்நாயக்கை கைது செய்தனர்.