ADDED : ஜூலை 14, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: ப.வேலுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட பஸ் ஸ்டாண்ட் அருகே சாக்கடை மற்றும் மழைநீர் செல்ல பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் அடியில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள், இறந்த விலங்குகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியை கடக்கும் பொதுமக்கள், துர்நாற்றத்தால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
அருகில் உள்ள வணிக நிறுவனங்களின் பணியாளர்கள், பாலத்தின் அடியில் உள்ள சாக்கடையில் குப்பைகள் அகற்ற வேண்டும் என துாய்மை பணியாளர்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் செவி சாய்க்காததால், தாங்களாகவே குப்பைகளை அகற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.