/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வருவாய்த்துறையினர் போராட்டம் விஸ்வரூபம் பணி முடக்கத்தால் அலுவலக கோப்புகள் தேக்கம்
/
வருவாய்த்துறையினர் போராட்டம் விஸ்வரூபம் பணி முடக்கத்தால் அலுவலக கோப்புகள் தேக்கம்
வருவாய்த்துறையினர் போராட்டம் விஸ்வரூபம் பணி முடக்கத்தால் அலுவலக கோப்புகள் தேக்கம்
வருவாய்த்துறையினர் போராட்டம் விஸ்வரூபம் பணி முடக்கத்தால் அலுவலக கோப்புகள் தேக்கம்
ADDED : அக் 10, 2024 01:37 AM
வருவாய்த்துறையினர் போராட்டம் விஸ்வரூபம்
பணி முடக்கத்தால் அலுவலக கோப்புகள் தேக்கம்
நாமக்கல், அக். 10-
வி.ஏ.ஓ.,வை தாக்கிய நபரை கைது செய்யக்கோரி, வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், நாமக்கல் மாவட்டத்தில், சான்றிதழ் வழங்கும் பணி முடங்கியதுடன், அனைத்து கோப்புகளும் தேக்கமடைந்துள்ளன.
ப.வேலுார் தாலுகா, கீரம்பூர் பிர்காவிற்குட்பட்ட நருவலுாரில், வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வருபவர் ராமன். கடந்த, 4ல், அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள மரத்தை, அப்பகுதியை சேர்ந்த விவசாயி திருமுருகன் அகற்றினார். இதுகுறித்த புகார்படி, வி.ஏ.ஓ., ராமன், சம்பவ இடத்துக்கு சென்று, மரம் அகற்றியது குறித்து திருமுருகனிடம் கேட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் வாய்த்தகராறு முற்றி கைகலப்பில் முடிந்தது.
ஆத்திரமடைந்த திருமுருகன், வி.ஏ.ஓ., ராமனை தாக்கி உள்ளார். இதுகுறித்து, வேலகவுண்டம்பட்டி போலீசில் புகாரளிக்கப்பட்டது. ஆனால், திருமுருகனை போலீசார் கைது செய்யவில்லை. இச்செயலை கண்டித்து, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கடந்த, 7ல், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், வி.ஏ.ஓ.,வை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆனால், இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், மாவட்ட அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, 'வி.ஏ.ஓ.,வை தாக்கிய திருமுருகனை கைது செய்ய வேண்டும்' என, வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தகவலறிந்த டி.ஆர்.ஓ., சுமன், ஆர்.டி.ஓ., பார்த்தீபன், கூடுதல் எஸ்.பி., தனராசு, ஏ.எஸ்.பி., ஆகாஸ்ஜோசி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'இரண்டொரு நாளில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துவிடுகிறோம். விரைவில் தமிழக முதல்வர் வருகை தர உள்ளார். நாமக்கல் மாவட்டத்திற்கு நல்ல பெயர் எடுக்க வேண்டும். அதற்கு ஒத்துழைப்பு அளித்து, போராட்டத்தை கைவிட வேண்டும்' என்றனர்.
அதற்கு, 'வி.ஏ.ஓ.,வை தாக்கிய நபரை கைது செய்யும் வரை போராட்டம் தொடர்வோம்' என திட்டவட்டமாக தெரிவித்தனர். காத்திருப்பு போராட்டத்தில், கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் விஜயகாந்த், சரவணன், ஆனந்த், பரமசிவம், பிரசாத் உள்பட, 400க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் பங்கேற்றனர்.
வருவாய் துறையினர் போராட்டம் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில், இருப்பிடம், ஜாதி, வருவாய் உள்ளிட்ட சான்றிதழ் வழங்கும் பணி முடங்கியதுடன், அனைத்து கோப்புகளும் தேக்கமடைந்துள்ளன.