ADDED : மே 21, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம் :பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளையம் பகுதியில் செயல்படும் ஒரு சாய ஆலையில் தொட்டியில் தேக்கி வைக்கப்பட்டு, மோட்டர் மூலம் சாயக்கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து, 'வாட்ஸாப்' உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பரவவிட்டுள்ளார். இதுகுறித்து, நேற்று நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை, குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் ஆவத்திபாளையம், களியனுார், சில்லாங்காடு ஆகிய பகுதிகளில் செயல்படும் சாய ஆலைகளில் ஆய்வு செய்தனர். பின், சாயக்கழிவுநீர் செல்லும் ஓடை, ஆற்றோரம் ஆய்வு செய்தனர். நேரில் ஆய்வு செய்ததால், விதிமீறி செயல்பட்ட சாய ஆலை மீது, இன்று அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என, மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.