/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அனுமதியின்றி கல் வெட்டிய இடத்தில் அதிகாரிகள் ஆய்வு
/
அனுமதியின்றி கல் வெட்டிய இடத்தில் அதிகாரிகள் ஆய்வு
அனுமதியின்றி கல் வெட்டிய இடத்தில் அதிகாரிகள் ஆய்வு
அனுமதியின்றி கல் வெட்டிய இடத்தில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஆக 15, 2025 02:44 AM
ராசிபுரம், ராசிபுரம், பட்டணம் முனியப்பன்பாளையம், பால்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் ராஜசேகர், 55; இவருக்கு, பட்டணம் முனியப்பன்பாளையம் செல்லும் சாலையோரம் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில், கடந்த சில வாரங்களாக பொக்லைன் இயந்திரம் மூலம் மண் வெட்டி, டிப்பர் லாரி மூலம், ராஜசேகர் விற்பனை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி பாறைகளுக்கு வெடி வைத்து, கட்டு கற்களாகவும் விற்பனை செய்து வருகிறார். இதுவரை, 30 அடி ஆழத்திற்கு கற்கள், மண்ணை வெட்டி விற்பனை செய்துள்ளார்.
இவர் வி.ஏ.ஓ.,-தாசில்தார் ஆகியோரிடம் அனுமதி பெறவில்லை என தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் கனிம வளத்துறை அதிகாரிகள் பாறை வெட்டிய இடங்களை ஆய்வு செய்தனர். மேலும் எவ்வளவு ஆழம், அகலம், நீளத்திற்கு வெட்டப்பட்டுள்ளது என அளந்து சென்றனர். இதுவரை கணக்கீடு செய்யாததால், அபராதம் குறித்து வருவாய் துறையினருக்கு தெரியப்படுத்தவில்லை என, வி.ஏ.ஒ., நல்லியப்பன் தெரிவித்தார்.