/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
18ல் ராசிபுரத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம்
/
18ல் ராசிபுரத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம்
18ல் ராசிபுரத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம்
18ல் ராசிபுரத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம்
ADDED : டிச 15, 2024 03:08 AM
ராசிபுரம்: 'ராசிபுரம் தாலுகாவில், வரும், 18ல் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், சேவைகள் பொதுமக்க-ளுக்கு விரைவில் கிடைத்திட, தமிழக அரசால் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் துவக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரு-கிறது.
இந்த திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும், ஒரு நாள் குறிப்பிட்ட தாலுகாவில் தங்கி, கள ஆய்வில் ஈடு-பட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறை-களை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்து வருகிறது.
அதன்படி, ராசிபுரம் தாலுகாவில் வரும், 18ல் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற உள்ளது. ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாலை, 4:30 மணியிலிருந்து, 6:00 மணிவரை. கலெக்டர் தலைமையில் உயர் அதிகாரிகளை கொண்ட குழுவினரால் மனுக்கள் பெறப்படுகிறது. பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை மனுக்க-ளாக அளித்து தீர்வு பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.