ADDED : ஆக 15, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: --ப.வேலுாரில், தென்றல் அறக்கட்டளை சார்பில், பள்ளி சாலையில் உள்ள நகர வர்த்தக சங்க திருமண மண்டபத்தில், 'பாரதி கண்ட கனவு நினைவாகியது என்பது குற்றமே' என்ற தலைப்பில் தமிழ் பேராசிரியர்கள் கலந்துகொள்ளும் பட்டிமன்ற விழா நடக்கிறது.
தொடர்ந்து, தமிழ் இலக்கியம் குறித்து சிறப்புரையும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு படிப்புக்கு தேவையான கல்வி ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. தமிழ் ஆர்வலர்கள், இவ்விழாவில் கலந்துகொண்டு, தமிழை மேலும் வளர்க்க உதவுமாறு தென்றல் அறக்கட்டளை சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.