/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எக்ஸல் வணிகவியல் கல்லூரியில் ஒருநாள் ஆராய்ச்சி பயிலரங்கம்
/
எக்ஸல் வணிகவியல் கல்லூரியில் ஒருநாள் ஆராய்ச்சி பயிலரங்கம்
எக்ஸல் வணிகவியல் கல்லூரியில் ஒருநாள் ஆராய்ச்சி பயிலரங்கம்
எக்ஸல் வணிகவியல் கல்லூரியில் ஒருநாள் ஆராய்ச்சி பயிலரங்கம்
ADDED : மார் 09, 2024 01:25 AM
குமாரபாளையம், குமாரபாளையம், எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லுாரியின், துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்பு துறை சார்பில், 'இனவேஷன் சஸ்டெய்னபிலிட்டி அண்ட் எபிசியன்சி' என்ற தலைப்பில், ஒருநாள் ஆராய்ச்சி பயிலரங்கம் நடந்தது.
துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்பு துறைத்தலைவர் கிறிஸ்டி ஜெனிபர் அனைவரையும் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் விமல் நிஷாந் தலைமை வகித்து, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கல்லுாரியின் உள்தர மதிப்பீட்டு பிரிவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் சங்கர் முன்னிலை வகித்தார்.
உதவிப்பேராசிரியை அமுதா, சிறப்பு விருந்தினர் மற்றும் பயிலரங்க பயிற்றுனரை அறிமுகம் செய்தார். கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரியின் நாகரிக தொழில் நுட்பவியல் துறை உதவிப்பேராசிரியர் சந்திரசேகரன், ஜவுளி தன்மை மேம்பாட்டு செயலாக்கம் குறித்தும், ஜவுளி செயலாக்கத்தில் புதுமையை புகுத்துதல் குறித்தும் பேசினார்.
துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்பு துறையை சேர்ந்த, 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். உதவிப்பேராசிரியர் பிரியதர்ஷினி நன்றி தெரிவித்தார்.
ஏற்பாடுகளை உதவிப்பேராசிரியர் ரமாபிரியா செய்திருந்தார்.

