/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் விபத்து ஒருவர் பலி; 7 பேர் காயம்
/
கொல்லிமலையில் விபத்து ஒருவர் பலி; 7 பேர் காயம்
ADDED : ஆக 02, 2025 01:41 AM
சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, தேவனுார் நாடு பஞ்., செங்காட்டுப்பட்டியை சேர்ந்த, எட்டு பேர் வேலை நிமித்தமாக அடிவார பகுதிக்கு நேற்று வந்தனர்.
அவர்கள், வேலையை முடித்துவிட்டு, மாலை, ஒரு வேனில் அனைவரும் ஏறி கொல்லிமலைக்கு புறப்பட்டனர். வேனை செங்காட்டுப்பட்டியை சேர்ந்த ஒருவர் ஓட்டினார். முதலாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வேன் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. தறிக்கெட்டு ஓடிய வேன், அருகில் இருந்த சுவற்றில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். ஏழு பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து, வாழவந்திநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.