/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளி மாணவியருக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு
/
பள்ளி மாணவியருக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : ஆக 02, 2025 01:41 AM
நாமக்கல், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாணவியர்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் சுமதி தலைமை வகித்தார். முன்னாள் மாணவியான டாக்டர் கவிதா பங்கேற்றார். அவர், மாணவியர்களுக்கு பள்ளி பருவத்தில் உடல், மன ரீதியாக ஏற்படும் மாற்றங்கள், அதை கையாளும் முறை, மொபைல் போனால் ஏற்படும் பாதிப்பு, குழந்தைகள் மீது பெற்றோர் வெளிப்படுத்தும் அக்கறையான வார்த்தைகள், கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
தொடர்ந்து, போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ.,க்கள் குணசிங், வெங்கடேஷன் ஆகியோர், குழந்தைகளை பள்ளியில் கொண்டுவந்து விடும் பெற்றோர் கட்டாயம், 'ஹெல்மெட்' அணிய வேண்டும். விபத்தில் சிக்கிய பின் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினர். மேலும், பாதுகாப்பாக சாலையை கடக்கும் முறைகள் குறித்தும் விளக்கினர்.