/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மூதாட்டி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
/
மூதாட்டி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ADDED : ஆக 16, 2024 05:33 AM
நாமகிரிப்பேட்டை, : நாமகிரிப்பேட்டையில், வீட்டை காலி செய்யாததால் மூதாட்டியை அடித்து கொலை செய்த வழக்கில், நேற்று மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நாமகிரிப்பேட்டை, ஐயப்பன் நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது வீட்டை நாகரத்தினம், 65, என்பவருக்கு போகியத்திற்கு விட்டுள்ளார். வீட்டை காலி செய்ய கேட்டபோது நாகரத்தினம் மற்றும் பொன்னுசாமி தரப்பினருக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த மே மாதம், நாகரத்தினம் ஐயப்பன் நகரில் உள்ள வீட்டில் இறந்து கிடந்தார். போலீசார் விசாரணையில், கொலைக்கு காரணமான வீட்டு உரிமையாளர் பொன்னுசாமி, அவரது மகள் மற்றும் கூலிப்படையினர் இருவர் என மொத்தம் நான்கு பேரை ஏற்கனவே கைது செய்தனர். கடைசி குற்றவாளியான, திருச்சி பொன்மலையை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ராஜ்குமாரை, 35, தேடி வந்தனர். இந்நிலையில் திருச்சி, சோமரசம்பேட்டையில் பதுங்கியிருந்த, ராஜ்குமாரை நேற்று போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

