/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெங்காய பயிருக்கு காப்பீடு 30க்குள் விண்ணப்பிக்கலாம்
/
வெங்காய பயிருக்கு காப்பீடு 30க்குள் விண்ணப்பிக்கலாம்
வெங்காய பயிருக்கு காப்பீடு 30க்குள் விண்ணப்பிக்கலாம்
வெங்காய பயிருக்கு காப்பீடு 30க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : நவ 28, 2024 06:51 AM
மல்லசமுத்திரம்: 'வையப்பமலை பிர்காவில், வெங்காய சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன-டையலாம்' என, மல்லசமுத்திரம் தோட்டக்கலை உதவி இயக்-குனர் ஜெயப்பிரபா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம், 2024--25ம் ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில் வெங்காய பயிருக்கு காப்பீடு செய்யப்படுகிறது. இக்காப்பீட்டு திட்டம்,
மல்லசமுத்திரம் வட்டாரம், வையப்பமலை பிர்காவி-லுள்ள வருவாய் கிராமங்களுக்கு மட்டும்
செய்யப்பட்டுள்ளது. மல்லசமுத்திரம் வட்டாரம், வையப்பமலை பிர்காவில் வெங்-காயம் சாகுபடி
செய்துள்ள விவசாயிகள், தங்களின் சுய விருப்-பத்தின் பேரில் பொது சேவை மையத்திலும், வங்கிகள் மற்றும்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வெங்காய பயிர் கடன் பெறும்போதும் காப்பீடு
பிரீமியம் தொகை செலுத்தி, இத்திட்டத்தில் இணையலாம்.இப்பயிர் காப்பீடு செய்ய தேவைப்படும் ஆவணங்களான ஆதார், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல்
ஆகியவற்றுடன் ஒரு ஏக்கருக்கு பிரீமிய தொகையான, 2,050.10 ரூபாய் செலுத்த வேண்டும். இப்பயிர் காப்பீடு
செய்ய, வரும், 30 இறுதி நாளாகும். வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் புயல், வெள்ளம் போன்ற
இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதன் பின் பயிர் காப்பீடு செய்ய இயலாத
சூழ்-நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. தாமதிக்காமல், காப்பீடு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில்
தெரிவித்துள்ளார்.