/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெங்காய பயிருக்கு காப்பீடு 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
/
வெங்காய பயிருக்கு காப்பீடு 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
வெங்காய பயிருக்கு காப்பீடு 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
வெங்காய பயிருக்கு காப்பீடு 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : நவ 19, 2024 01:33 AM
ராசிபுரம், நவ. 19-
ராசிபுரம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் யோகநாயகி வெளியிட்ட அறிக்கை:
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், 2024-25ம் ஆண்டு சிறப்பு பருவத்தில், வெங்காய பயிருக்கு காப்பீடு செய்யப்படுகிறது. ராசிபுரம் வட்டாரத்தில் வெங்காய பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், வேளாண் பயிர்கடன், நகைக்கடன் பெறும்போது, தங்களின் சுய விருப்பத்தின் பேரில் காப்பீடு பிரீமியம் செலுத்தி திட்டத்தில் இணையலாம். மேலும், பொது சேவை மையம் மூலம் பிரீமிய தொகை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.
ஆதார், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் பதிவு கட்டணத்துடன் ஏக்கருக்கு, 2,050 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். வெங்காய பயிருக்கு காப்பீடு செய்ய நவ., 30 கடைசி நாள். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதன் பின் பயிர் காப்பீடு செய்ய முடியாது. எனவே, கடைசி நாள் வரை காத்திருக்காமல் விரைவில் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என, தெரிவித்துள்ளார்.