/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொடர் மழை எதிரொலி வெங்காய சாகுபடி தீவிரம்
/
தொடர் மழை எதிரொலி வெங்காய சாகுபடி தீவிரம்
ADDED : அக் 12, 2025 02:45 AM
ராசிபுரம்: தொடர் மழை எதிரொலி காரணமாக, ராசிபுரம் வட்டாரத்தில் வெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
ராசிபுரம் பகுதியில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, கவுண்டம்பம்பாளையம் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், ராசிபுரம் வட்டாரத்தில் வேளாண் பணிகள் வேகமாக தொடங்கியுள்ளது. உழவு, களை எடுத்தல், வயல் அடித்தல் உள்-ளிட்ட பணிகளுக்கு ஆள் கிடைக்காமல் விவசாயிகள் தவிக்-கின்றனர். முக்கியமாக ராசிபுரம், கவுண்டம்பாளையம், அணைப்-பாளையம், புதுச்சத்திரம், கடந்தப்பட்டி உள்ளிட்ட இடங்களில் அதிகளவு விவசாயிகள் வெங்காயம் சாகுபடி செய்து வருகின்-றனர்.
தற்போது சின்ன வெங்காயம் கிலோ, 35 ரூபாய்க்கு குறையாமல் விற்கப்படுகிறது. மழை தொடர்ந்து பெய்தால், வெங்காயத்தில் பாதிப்பு ஏற்பட்டு விளைச்சல் குறையும்.
இதனால் வெங்காயம் விலை உயர வாய்ப்புள்ளது. ராசிபுரம் வட்-டாரத்தில் மட்டும், 20 ெஹக்டேர் அளவில் வெங்காயத்தை ஊன்றும் பணி நடந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.