/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்றுவிப்பு
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்றுவிப்பு
அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்றுவிப்பு
அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்றுவிப்பு
ADDED : அக் 12, 2025 02:44 AM
ராசிபுரம்: 'திருக்குறள் சொல்லும்; தமிழ்நாடு வெல்லும்' என்ற திட்டத்தின் கீழ், 8வது வாரமாக குறள் பயிற்றுவிக்கும் பயிற்சி வகுப்பு, ராசி-புரம் தமிழ் கழகம் சார்பில், பாரதிதாசன் நகராட்சி நடுநிலைப்பள்-ளியில் நடந்தது.
தலைமை ஆசிரியர் பாரதி முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட பள்ளி துணை ஆய்வாளரும், ராசிபுரம் தமிழ் கழகத்தின் செயலாளருமான பெரியசாமி துவக்கி வைத்தார். எலச்சிப்பா-ளையம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்ர-மணியம், பயிற்சியளித்தார். சிறப்பு கண்காணிப்பு அலுவலர் விஜ-யலட்சுமி மகாலிங்கம், மையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.முதன்மை கருத்தாளர் தட்சிணாமூர்த்தி, 33 வது அதிகாரம் கொல்-லாமை, 24 வது அதிகாரம் புகழ் ஆகியவற்றை நகைச்சுவை கதைகளுடனும் நாடகத்தின் வாயிலாகவும், நடிப்பின் வாயிலா-கவும் குழந்தைகளுக்கு இசையுடன் கற்றுத்தந்தார்.
தமிழ் சங்க பொருளாளர் ரீகன், இணை செயலாளர் இருசப்பன், தகவல் தொழில்நுட்ப தலைவர் சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.