/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆன்லைன் பட்டா மாறுதல்: காரணமின்றி மனுக்களை தள்ளுபடி செய்யக்கூடாது
/
ஆன்லைன் பட்டா மாறுதல்: காரணமின்றி மனுக்களை தள்ளுபடி செய்யக்கூடாது
ஆன்லைன் பட்டா மாறுதல்: காரணமின்றி மனுக்களை தள்ளுபடி செய்யக்கூடாது
ஆன்லைன் பட்டா மாறுதல்: காரணமின்றி மனுக்களை தள்ளுபடி செய்யக்கூடாது
ADDED : டிச 14, 2024 01:08 AM
ராசிபுரம், டிச. 14-
நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனர் மதுசூதன் ரெட்டி, நாமக்கல் கலெக்டர் உமா தலைமையில், நேற்று முன்தினம் நில அளவை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மதுசூதன் ரெட்டி கூறியதாவது:
பட்டா மாறுதல் மனுக்கள் மீதும் உரியகாலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். புல எல்லை மனுக்களை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும். பத்திரப்பதிவு அலுவலகம் மூலம் வரும் மனுக்கள், உரிய காலத்தில் கிடைக்கிறதா? அவ்வாறு கிடைத்தால் மனுக்கள் மீது நில அளவையர்கள், வி.ஏ.ஓ.,க்கள் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பொது சேவை மையம் மூலம் மனுக்கள் உள்ளீடு செய்யும் போது எவ்வித தவறுகளின்றி சரியான புல எண்கள், பத்திர ஆவண எண்களின் விபரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். மேலும், அரசு நடைமுறைபடுத்தப்பட்ட முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை முறையில் உட்பிரிவு மனுக்கள் மற்றும் பட்டா மாறுதல் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுக்களை உரிய காரணம் இல்லாமல் தள்ளுபடி செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.