sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

/

அரங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

அரங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

அரங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

ADDED : டிச 29, 2025 07:13 AM

Google News

ADDED : டிச 29, 2025 07:13 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அரங்கநாதர் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாமக்கல் நகரில், ஒரே கல்லில் உருவான மலையின் கிழக்கு பகுதியில், அரங்கநாயகி தாயார் உடனுரை அரங்கநாதர் கோவில் அமைந்-துள்ளது. மலையை குடைந்து குடைவரை கோவிலாக உருவாக்கப்பட்டு, தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கி.பி., 7ம் நுாற்றாண்டில், குணசீல அதியன் குல மன்னரால் உருவாக்கப்பட்ட புராண சிறப்பு பெற்-றது. இங்கு, கார்க்கோடகன் என்ற பாம்பின் மீது, அனந்த சயன கோலத்தில், அரங்கநாதர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்-கிறார்.

சுவாமி மூலவர் மற்றும் பரிவார தெய்வ சிலைகள் அனைத்தும் மலையை குடைந்து குடைவரை கோவிலாக உருவாக்கப்பட்டுள்ளது சிறப்பு. ஆண்டுதோறும், வைகுண்ட ஏகாதசி அன்று, இக்கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்-படும். அதன்படி, வைகுண்ட ஏகாதசியை முன்-னிட்டு, நாளை அதிகாலை, 4:15 மணிக்கு மேல், 5:00 மணிக்குள், பட்டாச்சாரியார்கள் சொக்க-வாசல் கதவுகளுக்கு சிறப்பு பூஜை செய்து, ஆகம விதிகள்படி சொர்க்கவாசல் எனும்

பரமபாத வாசல் வழியாக, சுவாமியின் ஜடாரி எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.

பக்தர்களின் கூட்ட நெரிசலை

கட்டுப்படுத்த, தடுப்பு அமைக்கும் பணி முழு-வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஏற்கனவே உள்ள, 10 'சிசிடிவி' கேமராவுடன், கூடுதலாக, 10 'சிசிடிவி' கேமரா பொருத்தும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, எஸ்.பி., விமலா தலைமையில், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.அரங்கநாதர் கோவிலில்

நாளை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

நாமக்கல், டிச. 29

நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அரங்கநாதர் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாமக்கல் நகரில், ஒரே கல்லில் உருவான மலையின் கிழக்கு பகுதியில், அரங்கநாயகி தாயார் உடனுரை அரங்கநாதர் கோவில் அமைந்-துள்ளது. மலையை குடைந்து குடைவரை கோவிலாக உருவாக்கப்பட்டு, தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கி.பி., 7ம் நுாற்றாண்டில், குணசீல அதியன் குல மன்னரால் உருவாக்கப்பட்ட புராண சிறப்பு பெற்-றது. இங்கு, கார்க்கோடகன் என்ற பாம்பின் மீது, அனந்த சயன கோலத்தில்,

அரங்கநாதர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்-கிறார்.

சுவாமி மூலவர் மற்றும் பரிவார தெய்வ சிலைகள் அனைத்தும் மலையை குடைந்து குடைவரை கோவிலாக உருவாக்கப்பட்டுள்ளது சிறப்பு. ஆண்டுதோறும், வைகுண்ட ஏகாதசி அன்று, இக்கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்-படும். அதன்படி, வைகுண்ட ஏகாதசியை முன்-னிட்டு, நாளை அதிகாலை, 4:15 மணிக்கு மேல், 5:00 மணிக்குள், பட்டாச்சாரியார்கள் சொக்க-வாசல் கதவுகளுக்கு சிறப்பு பூஜை செய்து, ஆகம விதிகள்படி சொர்க்கவாசல் எனும்

பரமபாத வாசல் வழியாக, சுவாமியின் ஜடாரி எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.

பக்தர்களின் கூட்ட நெரிசலை

கட்டுப்படுத்த, தடுப்பு அமைக்கும் பணி முழு-வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஏற்கனவே உள்ள, 10 'சிசிடிவி' கேமராவுடன், கூடுதலாக, 10 'சிசிடிவி' கேமரா பொருத்தும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, எஸ்.பி., விமலா தலைமையில், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

      Dinamalar
      Follow us