/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விளையாட்டு மைதானத்தில் நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு
/
விளையாட்டு மைதானத்தில் நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு
விளையாட்டு மைதானத்தில் நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு
விளையாட்டு மைதானத்தில் நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு
ADDED : ஜூலை 11, 2025 01:49 AM
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்ள ஏ.சி.யுடன் மற்றும் எலக்டரானிக் வசதியுடன் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நவீன வசதியுடன் கூடிய உடற்பயிற்சி கூடத்தை, நேற்று துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.
தொடர்ந்து மாவட்ட விளையாட்டு மைதானத்தில், பெண்களுக்கான விளையாட்டு விடுதியை உதயநிதி ஆய்வு செய்தார். சமையல் கூடம் சென்று உணவுகளை சாப்பிட்டு பார்த்தார்.
தொடர்ந்து அங்கிருந்த மாணவியரிடம் கலந்துரையாடினார். நிகழ்ச்சி முடிந்ததும் மாணவியருடன் குழு போட்டோ எடுத்துக் கொண்டார்.
இந்நிகழ்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் துர்கா மூர்த்தி, எம்.பி.,ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா உள்ளிட்ட
பலர் கலந்து
கொண்டனர்.