/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முத்துக்காளிப்பட்டி ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
/
முத்துக்காளிப்பட்டி ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
முத்துக்காளிப்பட்டி ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
முத்துக்காளிப்பட்டி ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
ADDED : அக் 05, 2024 06:16 AM
ராசிபுரம்: முத்துக்காளிப்பட்டி ஊராட்சியை, ராசிபுரம் நகராட்சியுடன் இணைக்க விவசாயிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ராசிபுரம் நகராட்சி தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ராசிபுரம் நகராட்சியை ஒட்டியுள்ள சில கிராம ஊராட்சிகளை, நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது. அதன்படி, ராசிபுரம் அடுத்துள்ள முத்துக்காளிப்பட்டி ஊராட்சியை, நகராட்சியுடன் இணைக்க இப்பகுதி மக்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பா.ஜ.லவின் மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவின் மாநில துணைத்தலைவர் லோகேந்திரன் ஊராட்சி தலைவருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நகராட்சியுன் முத்துக்காளிப்பட்டியை இணைத்தால், இப்பகுதி மக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த முடியாது. இந்த கூலியை மட்டுமே நம்பி வாழும் ஏழை தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். இப்பகுதியில் சொத்துவரி, குடிநீர் வரி ஆகியவை உயரும். வரிச்சுமையால் பொதுமக்கள் அவதிப்படுவர். குடியிருப்புகள் அதிகமாகும் வாய்ப்புள்ளதால், விவசாய நிலங்களும் பாதிக்கப்படும். எனவே, இந்த முயற்சியை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோல், நடந்து முடிந்த கிராம சபை கூட்டத்திலும் இதற்கான தீர்மானத்தை பொதுமக்கள் நிறைவேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.