/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணி ஒப்பந்த காலத்திற்குள் முடிக்க உத்தரவு

ADDED : ஜூன் 18, 2025 01:21 AM
பள்ளிப்பாளையம், நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினர் நல ஆணையாளருமான ஆசியா மரியம், மாவட்ட கலெக்டர் உமா ஆகியோர், நேற்று, பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில், 94.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணி, காடச்சநல்லுார் பஞ்.,ல், 10,000 மரக்கன்றுகளுக்கான நாற்றங்கால் பணி, ஆலாம்பாளையம் டவுன் பஞ்., ஆயக்காட்டூரில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 81.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 520 எண்ணிக்கையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி, மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் துார்வாரும் பணிகளை ஆய்வு செய்தனர்.
மேலும், பள்ளிப்பாளையம் நகரின் நெரிசலை குறைக்கும் வகையில், 3.40 கி.மீ., நீளத்தில் அமைக்கப்பட்ட இருவழித்தட உயர்மட்ட மேம்பாலத்தையும் ஆய்வு செய்தனர். இதையடுத்த பள்ளிப்பாளையம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளையும் பார்வையிட்டனர்.
அப்போது, 'பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினர் நல ஆணையாளருமான ஆசியா மரியம், அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். டி.ஆர்.ஓ., சுமன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.