/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நோயாளியுடன் தங்கும் உறவினருக்கும் முறையாக உணவு வழங்க உத்தரவு
/
நோயாளியுடன் தங்கும் உறவினருக்கும் முறையாக உணவு வழங்க உத்தரவு
நோயாளியுடன் தங்கும் உறவினருக்கும் முறையாக உணவு வழங்க உத்தரவு
நோயாளியுடன் தங்கும் உறவினருக்கும் முறையாக உணவு வழங்க உத்தரவு
ADDED : டிச 27, 2024 07:34 AM
ராசிபுரம்: ராசிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், கலெக்டர் உமா தலைமையில் நோயாளிகள் நலச்சங்க குழு கூட்டம் நடந்தது. சேர்மன் கவிதா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், நோயாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதில், கலெக்டர் உமா கூறியதாவது: 'மக்களை தேடி மருத்துவம்', 'இன்னுயிர் காப்போம்', 'நம்மை காக்கும், -48' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ராசிபுரத்தில், 53.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் திருச்செங்கோட்டில், 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை கட்டும் பணி நடந்து வருகிறது. பொதுமக்களுக்கு உயர் அறுவை சிகிச்சைகள், டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகள் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், 5 லட்சம் ரூபாய் வரை அரசு மருத்துவமனையில் வழங்கப்படுகிறது.
ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனை சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நோயாளிகள் நலச்சங்க கூட்டம், மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிறப்பான சிகிச்சை குறித்து மருத்துவர்கள் மற்றும் அரசுத்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகள் வருவதற்கு ஏதுவாக சாய்தளம் மற்றும் கைப்பிடி சுவர் உள்ளிட்டவற்றை முறையாக வைக்க வேண்டும். உள் நோயாளிகள், புறநோயாளிகள், கர்ப்பிணி பெண்களின் விபரங்கள், சுகப்பிரசவம் விபரம் பராமரிக்க வேண்டும். நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்கும் உறவினர்களுக்கு முறையாக உணவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.