/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இயற்கை வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு: விவசாயிகள் பங்கேற்பு
/
இயற்கை வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு: விவசாயிகள் பங்கேற்பு
இயற்கை வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு: விவசாயிகள் பங்கேற்பு
இயற்கை வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு: விவசாயிகள் பங்கேற்பு
ADDED : ஜூலை 20, 2025 07:51 AM
நாமக்கல்: வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில், இயற்கை மற்றும் அங்கக வேளாண் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நேற்று நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து, கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தார். கண்காட்சியில், விவசாயிகளுக்கு இயற்கை மற்றும் அங்கக வேளாண் குறித்த தொழில் நுட்பங்களை விளக்கவும், நவீன தொழில் நுட்பங்களை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையிலும், முன்னோடி விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை கொண்டு அரங்கம் அமைத்து காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும், பல்வேறு வேளாண் துறை மற்றும் வேளாண் கல்லுாரி அறிஞர்கள் பங்கேற்று, விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.
தொடர்ந்து, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலிருந்தும், ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.