/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு
/
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு
ADDED : நவ 05, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எலச்சிபாளையம், எலச்சிபாளையம் யூனியன், வேலகவுண்டம்பட்டியில் நேற்று, குடியிருப்பு பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, அவர்களின் வீட்டிற்கே சென்று கல்வியின் அவசியம் குறித்து எடுத்துக்கூறி, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி நடந்தது.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு பிரிவு) மோகன், பள்ளி துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர் அருள்புனிதன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகாலிங்கம், முதுகலை ஆசிரியர் கார்த்தி, ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துக்குமார், சுகந்தி, அம்பிகா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

