/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
/
பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : நவ 05, 2025 01:15 AM
நாமக்கல், :நாமக்கல் பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி, கோவை லீ மெரிடியன் ஓட்டலில், இரண்டு நாட்கள் நடந்தது. கல்வி நிறுவனங்களின் தலைவர் பழனி ஜி பெரியசாமி தலைமை வகித்து பேசினார்.
தாளாளர் கணபதி வரவேற்றார். கோவை கற்பகம் பல்கலை துணைவேந்தர் ராமசாமி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முதல் நாள், கல்லுாரி கல்வி இயக்கத்தின் முன்னாள் இணை இயக்குனர் ராவணன், மொரீசியஸ் குடியரசின் அரசு ஆலோசகர் மற்றும் புதுச்சேரி பல்கலை பேராசிரியர் குமரேசன் ராஜா, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை பேராசிரியர் குமரன் மற்றும் மனநல ஆலோசகர் ஸ்ரீதேவி ஆகியோர், ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தனர்.
இரண்டாம் நாள், அண்ணா பல்கலை துறைத்தலைவர் முத்தன் தைரோகேர் நிறுவன தலைவர் ஆரோக்கியசாமி வேலுமணி, அண்ணாமலை பல்கலை மருந்தியல் துறை பேராசிரியர் செல்வமுத்துகுமார், வேலுார் தொழில்நுட்ப பல்கலையின் கணினி அறிவியல் பேராசிரியர் ராஜசேகர் ஆகியோர் பேசினர்.
நிறைவு விழாவில், ஓய்வு பெற்ற முன்னாள் ஆட்சியர் மற்றும் பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களின் தலைமை அதிகாரி சம்பத் தலைமையுரையாற்றினார். கோவை பாரதியார் பல்கலை பதிவாளர் ராஜவேல், ஆசிரியர்கள், மாணவர்களை கையாளும் திறன் பற்றி எடுத்துரைத்தார். கல்லுாரி முதன்மையர் பெரியசாமி நன்றி கூறினார்.

