/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஒரே நாளில் 6 இடங்களில் சிறப்பு முகாம் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
/
ஒரே நாளில் 6 இடங்களில் சிறப்பு முகாம் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஒரே நாளில் 6 இடங்களில் சிறப்பு முகாம் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஒரே நாளில் 6 இடங்களில் சிறப்பு முகாம் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ADDED : செப் 05, 2025 01:14 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 6 இடங்களில் சிறப்பு முகாம் நடந்தது. இதில், 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் கடந்த ஜூலை முதல், 'உங்களுடன் ஸ்டாலின் 'திட்ட முகாம் நடந்து வருகிறது. மொத்தம், 238 சிறப்பு முகாம்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெறுகிறது. நகர்ப்புற பகுதிகளில், 13 அரசுத் துறைகளை சார்ந்த, 43 சேவைகளும், ஊரக பகுதிகளில், 15 துறைகளை சார்ந்த, 46 சேவைகளும் வழங்கப்படுகிறது. முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது, 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று நாமக்கல் மாநகராட்சி காதப்பள்ளி சமுதாய கூடம், ராசிபுரம் நகராட்சி பச்சி தெரு கமலா மண்டபம், வெங்கரை டவுன் பஞ்சாயத்து வேலாகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, எருமப்பட்டி வட்டாரம், திப்ரமாதேவி குன்னிமரத்தான் திருமண மண்டபம், மல்லசமுத்திரம் வட்டாரம் முஞ்சனுார் வீரமாத்தியம்மன் கோவில் மண்டபம், நாமகிரிப்பேட்டை வட்டாரம் முள்ளுக்குறிச்சி ஜி.டி.ஆர். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடந்தது.
மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு உடனடி தீர்வாக அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். ராசிபுரம் நகராட்சி சேர்மன் கவிதா சங்கர், துணை மேயர் பூபதி, மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.