/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலுார் சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவு
/
ப.வேலுார் சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவு
ADDED : நவ 03, 2025 03:16 AM
ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான்பேட்டையில் நேற்று நாட்டுக்கோழி சந்தை கூடியது. நாட்டுக்கோழிகளை வியாபாரிகளும், விவசாயிகளும் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ப.வேலுார் பகுதி முழுவதும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் நிறைந்த பகுதியாகும். ஞாயிறு விடுமுறை என்பதால், மட்டன், சிக்கன் அதிகளவு விற்ப-னையாகும். குறிப்பாக, அனைத்து கோழி கடைகளிலும் கூட்டம் அதிகளவு இருக்கும். இதில், நாட்டுக்கோழி விற்பனை முக்கிய இடம் பிடிக்கும்.
கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம், கோழிகள் வரத்து அதி-கரித்ததால், அதன் விலை சரிந்தது. கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக்கோழி, 600 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், நேற்று, 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், பண்ணைகளில் வளர்ப்பு கிராஸ் நாட்டுக்கோழி கடந்த வாரம் கிலோ, 350 ரூபாய்க்கு விற்றது. தற்போது, 300 ரூபாய்க்கு விற்-பனை செய்யப்பட்டது.

