/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் உழவர் சந்தையில் 49 டன் காய்கறி விற்பனை
/
நாமக்கல் உழவர் சந்தையில் 49 டன் காய்கறி விற்பனை
ADDED : நவ 03, 2025 03:16 AM
நாமக்கல்: நாமக்கல் கோட்டை மெயின் சாலையில், உழவர் சந்தை செயல்-பட்டு வருகிறது. தினமும், காலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்-டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை அறுவடை செய்து கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொது-மக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்-றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்-கிழமைகளில், அதிகமான பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.
நேற்று, உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 195 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். 39,550 கிலோ காய்கறி, 9,715 கிலோ பழங்கள், 30 கிலோ பூக்கள் என மொத்தம், 49,295 கிலோ விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்தனர்.அதன் மூலம், 21 லட்சத்து, 28,370 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி ஒரு கிலோ, 36 ரூபாய், கத்தரி, 100, வெண்டை, 48, புடலங்காய், 60, பீர்க்கங்காய், 64, பாகற்காய், 60, சின்ன வெங்-காயம், 40, பெரிய வெங்காயம், 30 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

