ராசிபுரம் உழவர் சந்தையில், நேற்று தக்காளி கிலோ, 28 ரூபாய், கத்தரிக்காய், 100, வெண்டை, 42, புடலை, 50, பீர்க்கன், 60, பாகல், 55, சுரைக்காய், 15, பச்சை மிளகாய், 32, முருங்கை, 80, சின்ன வெங்காயம், 52, பெரிய வெங்காயம், 35, முட்டைகோஸ், 30, கேரட், 85, பீன்ஸ், 95, பீட்ரூட், 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், வாழைப்பழம் கிலோ, 40 ரூபாய், கொய்யா, 60, பப்பாளி, 30, தர்பூசணி, 15, எலுமிச்சை, 70 ரூபாய்க்கு விற்பனையாகின.
நேற்று ஒரே நாளில், 28,925 கிலோ காய்கறி, 9,750 கிலோ பழங்கள், 435 கிலோ பூக்கள் என மொத்தம், 39.11 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின. கடந்த வாரம் கிலோ, 38 ரூபாய்க்கு விற்ற தக்காளி நேற்று, 28 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், 70 ரூபாய்க்கு விற்ற கத்தரிக்காய், 100 ரூபாய்க்கு விற்றது. இதனால் கத்தறி விற்பனை வழக்கத்தைவிட குறைந்திருந்தது.

