/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தெப்பக்குளத்திற்கு தண்ணீர் செல்ல வாய்க்கால் அமைக்கும் பணி தீவிரம்
/
தெப்பக்குளத்திற்கு தண்ணீர் செல்ல வாய்க்கால் அமைக்கும் பணி தீவிரம்
தெப்பக்குளத்திற்கு தண்ணீர் செல்ல வாய்க்கால் அமைக்கும் பணி தீவிரம்
தெப்பக்குளத்திற்கு தண்ணீர் செல்ல வாய்க்கால் அமைக்கும் பணி தீவிரம்
ADDED : நவ 03, 2025 03:17 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் சிவன் கோவில் அருகே, தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல, மூன்று கோடி ரூபாயில் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்தது.
சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவில் செல்லும் வழியில் உள்ள தெப்பக்குளத்தில், பல ஆண்டுகளுக்கு முன் தெப்ப உற்சவ விழா நடந்தது. நாளடைவில், கழிவுநீர் மற்றும் குப்பை கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசியது. இதனால் இப்பகுதி பொதுமக்கள், தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.சேந்தமங்கலம் டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில், கலைஞர் நகர்ப்-புற மேம்பாட்டு திட்டத்தில் இந்த தெப்பக்குளம் சீரமைக்கப்பட்-டது. மேலும், பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்காக, பேவர் பிளாக் கற்கள் பதியப்பட்டுள்ளது. தெப்பக்குளம் அருகே குழந்-தைகள் விளையாட பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்நி-லையில், மூன்று கோடி ரூபாய் செலவில் பொம்மசமுத்திரம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரை, அந்த வழியாக செல்லும் வாய்க்காலில் இருந்து தெப்பக்குளத்திற்கு கொண்டு செல்ல, 4 அடியில் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகி-றது. தற்போது, கொல்லிமலையில் பெய்த தொடர் மழையால் பொம்மசமுத்திரம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதில் இருந்து வெளியேறும் உபரி நீரை கொண்டு செல்ல வாய்க்கால் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

