/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலூரில் இரட்டை கொலை வழக்கு: தீயணைப்பு வீரர் மீது பாய்ந்தது குண்டாஸ்

ADDED : ஜன 30, 2024 03:21 PM
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, வயதான தம்பதியரை அடித்து கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைதான தீயணைப்பு படை வீரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.நாமக்கல், ப.வேலுார் அருகே குப்புச்சிபாளையம் தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகம், 70.
இவரது மனைவி நல்லம்மாள், 65. வயதான தம்பதியரை கடந்த, 2023 அக்., 12ல் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், கொடூரமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே நல்லம்மாள் உயிரிழந்தார். படுகாயமடைந்த சண்முகம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.ப.வேலுார் டி.எஸ்.பி., ராஜமுரளி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, கொலைக்கு காரணமான, குப்புச்சிபாளையத்தை சேர்ந்த தீயணைப்பு படை வீரர் ஜனார்த்தனன், 33, என்பவரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.அவரது குற்றச்செயலை தடுக்கும் பொருட்டு, நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், ஜனார்த்தனனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைத்தார். அதையேற்ற கலெக்டர் உமா, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, சேலம் மத்திய சிறையில் உள்ள ஜனார்த்தனிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான நகலை, ப.வேலுார் போலீசார், நேற்று வழங்கினர்.