/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலுாரில் அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மனு
/
ப.வேலுாரில் அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மனு
ப.வேலுாரில் அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மனு
ப.வேலுாரில் அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மனு
ADDED : டிச 10, 2024 07:57 AM
நாமக்கல்: 'ப.வேலுார் டவுன் பஞ்., தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்-மானம் கொண்டுவர வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர், டவுன் பஞ்., உதவி இயக்குனர், செயல் அலுவலர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - சுயேச்சை என, 17 கவுன்சிலர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்-டுகள் உள்ளன. அதில், தலைவராக லட்சுமி,
துணைத்தலைவராக ராஜா உள்ளனர். தி.மு.க.,-14, அ.தி.மு.க.,-2, பா.ம.க., சுயேச்சை தலா ஒன்று என,
மொத்தம், 18 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்நி-லையில், தலைவருக்கு எதிராக, துணைத்தலைவர்
உள்பட, மொத்தம், 17 கவுன்சிலர்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர். அவர்கள், நேற்று நாமக்கல் கலெக்டர்
உமாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்.,ல் வார்டு உறுப்பி-னர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள்
பணியாற்றி வரும் நாங்கள், மாவட்ட நகராட்சிகள் சட்டப்படி, ப.வேலுார் சிறப்பு நிலை டவுன் பஞ்., தலைவர்
லட்சுமிக்கு எதிராக, மன்ற கூட்-டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அறிவிப்பு, தீர்-மானம்
மீதான விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு நடத்த இந்த மனுவை சமர்ப்பிக்கிறோம்.டவுன் பஞ்., தலைவராக லட்சுமி பதவியேற்ற நாள் முதல், கவுன்-சிலர்களான எங்களிடம், மரியாதை
இல்லாமல் அதிகாரத்து-டனும், சர்வாதிகார போக்கிலும் நடந்துகொண்டு, டவுன் பஞ்., மன்றத்தில் ஒரு
சுமுகமான போக்கை கடைப்பிடிக்காமல் நடந்து கொண்டுள்ளார். தலைவர் லட்சுமி வருவதற்கு முன்பே,
அவரது கணவர் முரளி தினமும் அலுவலகத்திற்கு வந்து தலைவரின் அனைத்து வேலைகளையும்
செய்து வருகிறார். கவுன்சிலர்கள் கூட்டத்தில், தீர்மானங்களை வைக்காமல் அவரும், அவரது கண-வரும்
சேர்ந்து தனிப்பட்ட வகையில் செலவினங்களுக்கு கையெ-ழுத்திட்டு பணம் எடுத்து வருகின்றனர். அதில்,
முரளியின் தலை-யீடு ஒவ்வொரு நடவடிக்கையிலும் உள்ளது.
தலைவராக லட்சுமி பொறுப்பேற்று, 30 மாதங்களில், 13 மாதாந்-திர கூட்டங்கள் மட்டுமே
கூட்டப்பட்டுள்ளன. ப.வேலுார் டவுன் பஞ்.,ல் பலமுறைகேடு செய்துவிட்டு, 2023 மே மாதம், 'நான் ஒரு
கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து தான் இந்த பதவிக்கு வந்தேன்' என, ஒரு வார இதழில், வெளிப்படையாக
பேட்டி அளித்-துள்ளார்.
தனக்கு கீழ்படியாத செயல் அலுவலர்களை சரிவர பணி செய்ய-விடாமல் தொந்தரவு கொடுத்து,
அவர்களை மிரட்டி ஒரு எதேச்ச-திகார போக்குடன் நடந்து கொள்ளும் டவுன் பஞ்., தலைவர் லட்-சுமியால்,
இதுவரை, 13 செயல் அலுவலர்கள் மாற்றப்பட்டுள்-ளனர். தொடர்ந்து அடாவடியில் ஈடுபடும், ப.வேலுார்
சிறப்பு நிலை டவுன் பஞ்., தலைவர் லட்சுமிக்கு எதிராக, தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் கீழ்,
மன்ற கூட்டத்தில் நம்பிக்-கையில்லா தீர்மானம் கொண்டுவர அறிவிப்பு கொடுத்து, அந்த தீர்மானம் மீது
விவாதம் நடத்தி ஓட்டெடுப்புக்கு விடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, ப.வேலுார் செயல் அலுவலர் சோமசுந்தரத்திடம் கேட்டபோது, ''ப.வேலுார் டவுன் பஞ்.,
தலைவர் லட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அனைத்து கவுன்சிலர்-களும்
கையொப்பமிட்ட மனு அளித்துள்ளனர். மனுவை பெற்றுக்-கொண்டு ஒப்புதல் கடிதம் அளித்துள்ளேன்.
மேலும், இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளிடம் கலந்து உரிய முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.