sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ப.வேலுார் டவுன் பஞ்.,ல் வரும் 30ல் மன்ற கூட்டம்

/

ப.வேலுார் டவுன் பஞ்.,ல் வரும் 30ல் மன்ற கூட்டம்

ப.வேலுார் டவுன் பஞ்.,ல் வரும் 30ல் மன்ற கூட்டம்

ப.வேலுார் டவுன் பஞ்.,ல் வரும் 30ல் மன்ற கூட்டம்


ADDED : டிச 28, 2025 07:22 AM

Google News

ADDED : டிச 28, 2025 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார் டவுன் பஞ்.,ல் 18 வார்டுகள் உள்ளன. தி.மு.க.,வை சேர்ந்த கவுன்சிலர் லட்சுமி, தலை-வராகவும்; கவுன்சிலர் ராஜா, துணைத்தலைவரா-கவும் உள்ளனர். தற்போது டிச., மாதத்திற்கான மன்ற கூட்டம் நடத்த, தலைவர் லட்சுமி, செயல் அலுவலர் சண்முகம் முடிவு செய்தனர். அதன்-படி, வரும், 30ல் மன்ற கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, தலைவர் லட்சுமி சார்பில் கவுன்சிலர்களுக்கு அழைப்பிதழ் வழங்-கப்பட்டுள்ளது.கடந்த, 2 ஆண்டாக மன்ற கூட்டத்தில் கவுன்சி-லர்களின் ஆதரவு இல்லாததால், அனைத்து தீர்-மானங்களும் தோல்வி அடைந்தன. இதனால் டவுன் பஞ்., நிர்வாம் முடங்கியது. இதையடுத்து கடந்த நவ., 14ல், தி.மு.க., கவுன்சிலர்கள் சேர்ந்து,

தலைவர் லட்சுமி மீது நம்பிக்கை-யில்லா தீர்மானம் நடத்தினர். ஆனால், நம்பிக்-கையில்லா தீர்மானம் தோல்வியடைந்து, மீண்டும் தலைவராக லட்சுமி நீடிப்பார் என செயல் அலுவலர் சண்முகம் அறிவித்தார். இந்நிலையில், வரும் 30ல் மன்ற கூட்டம் நடத்து-வதாக தலைவர் லட்சுமி சார்பில், கவுன்சிலர்க-ளுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில், ப.வேலுார் டவுன் பஞ்., பணிகள் தொடர்ந்து முடங்கி போய் கிடப்பதால் பொதுமக்-களிடம் அதிருப்தி நிலவுகிறது. இதனால் டவுன் பஞ்சாயத்தில் கொண்டு வரும், தீர்மானங்களை நிறைவேற்ற அனைத்து கட்சி கவுன்சிலர்களிடம் ஒத்துழைப்பு வழங்க வேண்டி டவுன் பஞ்., நிர்-வாகம், சுமுக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.






      Dinamalar
      Follow us