/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெண்ணந்துாரில் நெல் நடவு பணி தீவிரம்
/
வெண்ணந்துாரில் நெல் நடவு பணி தீவிரம்
ADDED : டிச 20, 2024 01:00 AM
வெண்ணந்துாரில் நெல் நடவு பணி தீவிரம்
வெண்ணந்தூர், டிச. 20-
வெண்ணந்தூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் தொடர் மழை பெய்தது. இந்நிலையில் விவசாயிகள் நெல் நடவு பணியை துவங்கியுள்ளனர். ஒரு சில பகுதிகளில் உள்ள கிணறுகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளதால், முன்னதாக நெல் நாற்று விடப்பட்டு, நடவு பணி தொடங்கி உள்ளனர்.
* சேந்தமங்கலம் யூனியனில் காளப்பநாய்கன்பட்டி, துத்திக்குளம், காரவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, 5க்கும் மேற்பட்ட பெரிய ஏரிகள் நிரம்பியுள்ளன. அந்த பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் தண்ணீர் மட்டம் கிடு கிடு என உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் கார்த்திகை மாதப்பட்டமாக, சூப்பர் பொன்னி, ஐ.ஆர்., 20 உள்ளிட்ட ரக நெற்பயிர் செய்துள்ளனர். சில நாட்களாக இப்பகுதியில் தொடர் மழை பெய்ததால், நெற் பயிர்களில் அதிகளவில் களைகள் முளைத்துள்ளன. களையை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.