/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளிப்பாளையம் முதல் டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
/
பள்ளிப்பாளையம் முதல் டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
ADDED : நவ 25, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம், குமாரபாளையம், வெப்படை, மொளசி போலீஸ் ஸ்டேஷன் மற்றும் விரைவில் துவங்க உள்ள கொக்கராயன்பேட்டை போலீஸ் ஸ்டேஷனை உள்ளடக்கி, புதிய டி.எஸ்.பி., அலுவலகம், பள்ளிப்பாளையம், ஆர்.எஸ்., சாலை, காந்திபுரம் இரண்டாவது வீதியில் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று, பள்ளிப்பாளையம் உட்கோட்டத்தின் முதல்டி.எஸ்.பி.,யாக கவுதம், நேற்று காலை, 10:00 மணிக்கு பொறுப்பேற்றுக்கொண்டார்.அவருக்கு, பள்ளிப்பாளையம், வெப்படை, குமாரபாளையம், மொளசி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர். இவர் இதற்கு முன், தேவகோட்டையில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

