ADDED : மார் 29, 2025 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லுார் டவுன் பஞ்சாயத்து, குருசாமிபா-ளையத்தில் பிரசித்தி பெற்ற சிவசுப்ரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடப்பது வழக்கம்.
இந்தாண்டு தேர் திருவிழா வரும், 11ல் நடக்கிறது. முன்னதாக, சுவாமி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. திருக்கல்யாணத்தை அடுத்து அன்னதா-னமும் தேர் திருவிழாவும் நடக்கிறது. தேர் திருவிழாவின் போது அன்னதானம் வழங்க, அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை, பக்தர்கள் தானமாக வழங்க கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்-டுள்ளது.