/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஞ்., தலைவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதாக கூறி மறியலால் பரபரப்பு
/
பஞ்., தலைவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதாக கூறி மறியலால் பரபரப்பு
பஞ்., தலைவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதாக கூறி மறியலால் பரபரப்பு
பஞ்., தலைவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதாக கூறி மறியலால் பரபரப்பு
ADDED : ஏப் 20, 2024 07:22 AM
மோகனுார் : கிராம பஞ்., தலைவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள், பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மோகனுாரில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மோகனுார் ஒன்றியத்துக்குட்பட்ட குமரிபாளையம் பஞ்., தலைவராக இருப்பவர் சுசீலா. இவர், பஞ்.,க்குட்பட்ட சங்கரம்பாளையத்தில் உள்ள காலணியில், கணவர் முருகேசன், மகன், மகளுடன் வசித்து வருகிறார். அவர்கள், சங்கரம்பாளையத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் தான் ஓட்டுப்போட்டு வந்தனர். இந்நிலையில், பஞ்., தலைவர் சுசீலா தவிர குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஓட்டு இருந்தது. சுசீலாவின் ஓட்டு மட்டும், லோக்சபா தேர்தல் வாக்காளர் பட்டியலில் இல்லை என தெரியவந்தது. அதனால், அதிர்ச்சியடைந்த அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
தொடர்ந்து, ஒருவந்துார் பஞ்., முன்னாள் தலைவரும், விவசாய முன்னேற்ற கழக நிறுவன தலைவருமான செல்ல ராசாமணி, பஞ்., தலைவர் சுசீலா அவரது கணவர் முருகேசன் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் என, 100க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை சங்கரம்பாளையம் - கிடாரம் செல்லும் சாலையில், நேற்று மாலை, 6:00 மணிக்கு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கூடுதல் எஸ்.பி., தனராசு, மோகனுார் இன்ஸ்பெக்டர் சவிதா, தாசில்தார் மணிகண்டன் ஆகியோர், சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவரது பெயர் சம்பந்தமில்லாமல் மோகனுார் டவுன் பஞ்.,க்கு சென்றது குறித்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பினர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பினரையும் சமரசம் செய்த போலீசார், பஞ்., தலைவர் சுசீலாவின் பெயர் தவறுதலாக, மோகனுார் டவுன் பஞ்.,ல் பதிவாகி விட்டது. அதையடுத்து, அவர் அங்கு சென்று ஓட்டு போட்டுள்ளார் என தெரிவித்தனர்.அதையடுத்து, சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால், அப்பகுதியில், ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

