/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பரமத்தி மலர் பப்ளிக் பள்ளி சி.பி.எஸ்.சி., தேர்வில் சிறப்பிடம்
/
பரமத்தி மலர் பப்ளிக் பள்ளி சி.பி.எஸ்.சி., தேர்வில் சிறப்பிடம்
பரமத்தி மலர் பப்ளிக் பள்ளி சி.பி.எஸ்.சி., தேர்வில் சிறப்பிடம்
பரமத்தி மலர் பப்ளிக் பள்ளி சி.பி.எஸ்.சி., தேர்வில் சிறப்பிடம்
ADDED : மே 16, 2025 01:29 AM
ப.வேலுார், ப.வேலுார் அருகே உள்ள, பரமத்தி மலர் பப்ளிக் பள்ளி மார்ச் 2025ல், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மலர் பப்ளிக் பள்ளி (சி.பி.எஸ்.சி.,) மாணவர் சசிதரன், 500-க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி டான்யா, 500க்கு 487 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடமும், மாணவி மௌனிஷா, 500-க்கு 480 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாமிடத்தையும் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர் நதின், 500-க்கு 475 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி சுவேஷ்லா, 500-க்கு 474 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடமும், மாணவர் முகமதுஹர்சத், 500-க்கு 452 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில்
மூன்றாமிடம் பெற்றுள்ளார்.
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி செயலாளர் கந்தசாமி, பொருளாளர் வெங்கடாசலம், பள்ளி துணைத்
தலைவர் சுசீலா ராஜேந்திரன், துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி தங்கராஜு, பள்ளி முதல்வர் ஆரோக்கியராஜ், இயக்குனர்கள், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.