/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாணவர்களின் பெற்றோர் பள்ளியில் மரக்கன்று நடவு
/
மாணவர்களின் பெற்றோர் பள்ளியில் மரக்கன்று நடவு
ADDED : ஜூன் 19, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் அருகே, ஒட்டமெத்தை பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது.
இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். உலக சுற்றுப்புற சூழல் தினத்தையொட்டி, 'மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், சுற்றுப்புற சூழல் காப்போம்' என்ற குறிக்கோளுடன், நேற்று இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து, பள்ளி வளாகம் முழுதும் மரக்கன்றுகளை நட்டனர்.