/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர் போராட்டம்
/
பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர் போராட்டம்
ADDED : நவ 25, 2025 11:44 PM
நாமக்கல்: தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி, மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு பூட்டு போட்டனர்.
நாமக்கல் மாவட்டம், குப்பம்பாளையத்தில், பஞ்., துவக்கப்பள்ளி உள்ளது. தலைமையாசிரியராக பொன்மதி, உதவி ஆசிரியராக ஞானவேல் பணியாற்றுகின்றனர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில், மொத்தம், ஏழு பேர் மட்டுமே படிக்கின்றனர். நான்கு, ஐந்தாம் வகுப்பில், ஒரு மாணவர் கூட இல்லை.
இந்நிலையில், பொன்மதி, ஜாதி பாகுபாடு பார்ப்பதாகவும், மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்துவதில்லை எனவும் புகார் எழுந்தது. மேலும், பள்ளி கல்வித்துறைக்கு புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில், ஆவேசமடைந்த பெற்றோர், நேற்று காலை, 9:00 மணிக்கு பள்ளி கேட்டுக்கு பூட்டுபோட்டு தர்ணா செய்தனர். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பச்சமுத்து விசாரித்தார்.
அப்போது, 'தலைமையாசிரியரை மாற்ற வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, நாமக்கல் மாருதிநகர் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சாந்திக்கு, குப்பம்பாளையத்திற்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டது.

