sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாணவனை தாக்கிய தாளாளர் மகன் கண்டித்து பெற்றோர் சாலை மறியல்

/

மாணவனை தாக்கிய தாளாளர் மகன் கண்டித்து பெற்றோர் சாலை மறியல்

மாணவனை தாக்கிய தாளாளர் மகன் கண்டித்து பெற்றோர் சாலை மறியல்

மாணவனை தாக்கிய தாளாளர் மகன் கண்டித்து பெற்றோர் சாலை மறியல்


ADDED : நவ 11, 2025 06:48 AM

Google News

ADDED : நவ 11, 2025 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, பிளஸ் 1 மாணவனை தாக்கிய, தனியார் பள்ளி தாளாளரின் மகனை கண்டித்து, பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், தம்மம்பட்டியை சேர்ந்த 17 வயது மாணவன் கணினி பாடப்பி-ரிவில், பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று முன்தினம், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு நடந்துள்ளது. அப்போது, அந்த மாணவன், முன்பக்க இருக்கையில் கால்களை நீட்டி வைத்து துாங்கி கொண்டிருந்துள்ளார்.

இதைப்பார்த்த தாளாளர் தனபாலின் மகன் நவீன், 37, மாணவனை அழைத்து கண்டித்தபோது அடித்துள்ளார். இதில், மாணவனின் கை, கால்-களில் காயம் ஏற்பட்டதால், முள்ளுக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வைத்துள்ளனர். பின், மாணவனின் பெற்றோருக்கு போன் செய்து, 'உங்கள் மகன் தவறு செய்து விட்டான்; அழைத்து கண்டிக்கும்போது சிறிய காயம் ஏற்பட்டு-விட்டது; நேரில் வந்து அழைத்துச்செல்லுங்கள்' என, பள்ளி நிர்-வாகத்தில் இருந்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு வந்த பெற்றோர், இரவு, 8:30 மணிக்கு மாணவனை அழைத்து சென்றுள்ளனர்.இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு வந்த பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் பெற்றோர், தாளாளர் மகன் மீது நடவ-டிக்கை எடுக்கக்கோரி, முள்ளுக்குறிச்சி பிரதான சாலையில் மறி-யலில் ஈடுபட்டனர். ராசிபுரம் டி.எஸ்.பி., விஜயராகவன் தலை-மையில், ஆயில்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்-போது, 'தாளாளர் மகன் இனி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வளாகத்திற்குள் வர மாட்டார்' என, உறுதியளித்ததை அடுத்து பெற்றோர் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us